தெய்வமாக போற்றப்படும் வெள்ளை யானை ! ! !
இந்து மதத்தில் தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இந்திரன் குறிப்பிடப்படுகிறார். இந்த இந்திரனின் வாகனம் ஒரு வெள்ளை நிறம் கொண்ட யானையாகும். இந்த யானைக்கு ஐராவதம் என்று பெயர்
இன்றும் வைணவத் திருக்கோயில்களின் பிரம்மோற்சவத்தின் போது இறைவனின் உற்சவ மூர்த்தி ஏழாம் நாள் யானை வாகனத்தில் திரு வீதி வலம் வருவார். இந்த யானை வாகனத்தை கஜ வாகனம் அல்லது 'ஐராவத வாகனம்' என்றே அழைக்கின்றனர்.